25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கி பயன்பெற ஏதுவாக கூட்டுறவு அங்காடிகளில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கி பயன்பெற ஏதுவாக கூட்டுறவு அங்காடிகளில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோருக்கு அன்றாடத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ஒருங்கிணைந்த “சிறப்பு மளிகைத் தொகுப்பு” ரூ. 200 என்ற விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின்  விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு கூட்டுறவுத் துறையால் 31.10.2026 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இத்தொகுப்பில், 10 வகையான மளிகைப் பொருட்களான கடலைப் பருப்பு -250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், மிளகாய் -100 கிராம், தனியா -150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு -100 கிராம், உடைத்த உறுத்தம் பருப்பு -100 கிராம், சீரகம் -50 கிராம் மற்றும் சோம்பு-50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையளவிலான பொருட்கள் மொத்தம் 9 அங்காடிகள் மூலம் வழங்கப்படுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் விருதுநகர் அங்காடி மூலம் 40 தொகுப்புகளும்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அங்காடி மூலம் 40 தொகுப்புகளும்,  இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் 60 தொகுப்புகளும், அருப்புக்கோட்டை புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை மூலம் 10 தொகுப்புகளும்,வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் வத்திராயிருப்பு அங்காடி மூலம் 17 தொகுப்புகளும், ரெங்கப்பநாயக்கன்பட்டி அங்காடி மூலம் 12 தொகுப்புகளும், சத்திரப்பட்டி தொடக்க கூட்டுறவு பண்டகசாலை மூலம் 10 தொகுப்புகளும், பந்தல்குடி கூட்டுறவு பண்டகசாலை மூலம் 10 தொகுப்புகளும், தளவாய்புரம் கூட்டுறவு பண்டகசாலை மூலம் 3 தொகுப்புகளும் என மொத்தம் 202 தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எனவே, மாவட்டத்தில் 9 அங்காடிகள் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.200/- க்கு விற்பனை செய்யப்படும் தரமான 10 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த சிறப்பு மளிகைத் தொகுப்பினை வாங்கிய பொதுமக்கள் தெரிவிக்கையில் எனது பெயர் வாணி, விருதுநகரில் வசிக்கிறேன். தமிழக அரசின் மூலம் சிறப்பு மளிகைத் தொகுப்பில், ரூ.200 மதிப்பில் 10 பொருட்கள் கொடுக்கிறார்கள். இந்த தொகுப்பின் மதிப்பு வெளியில் சுமார் ரூ.300/- இருக்கும். வருகின்ற தீபாவளி பண்டிகை காலங்களில் இந்த குறைந்த விலையிலான பொருட்களை வழங்குவது உதவியாக உள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எனது பெயர் காமாட்சி, கூட்டுறவு அங்காடிகள் மூலம் கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, உடைத்த உறுத்தம் பருப்பு,  சீரகம், சோம்பு என 10 பொருட்கள் ரூ.200 க்கு விற்பனை செய்கிறார்கள். எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களுக்கு இந்த குறைந்த விலையிலான தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தொகுப்பினை கூட்டுறவு அங்காடி மூலம் வாங்குவதால் ரூ.100 வரை சேமிக்க முடிகிறது. இதுபோன்ற ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைகளிலும் கவனம் செலுத்தும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News