ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு.
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அய்யனார்கோவில் ஆற்றுப் பகுதியில் கடந்தசில மாதங்களாக போதிய மழை இல்லாததால்ஆறு வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாகபிராவடி மற்றும் கோட்டை மலைப்பகுதிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நீராவி அருவி மற்றும்மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில்ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைப் பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறைஅனுமதி மறுத்துள்ளது.
தற்போது ஆற்றுப் பகுதியில் பெருக்கெடுத்துவரும் தண்ணீர், தடுப்பணை வழியாக நகராட்சியின் 6-வது மைல்குடிநீர் தேக்கத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
மலைப் பகுதி ஆற்றில் நீர்வரத்துஅதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 6-வது மைல் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 7 அடியாக உயர்ந்துள்ளது. ஆற்றில் தொடர்ச்சியாக தண்ணீர்வந்துகொண்டிருப்பதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply