தேர்தல் நடத்தை விதிமுறைகளை (Model Code of Conduct) முறையாக அமல்படுத்தவும், பணப் புழக்கம் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கவும்,தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை (Model Code of Conduct) முறையாக அமல்படுத்தவும், பணப் புழக்கம் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கவும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளன.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நான்கு முக்கியக் குழுக்கள் பணியமர்த்தப்பட உள்ளன.அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் (Flying Squads) வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதேபோல், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 63 நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டு, அவற்றில் 441 நபர்கள் பணியாற்ற உள்ளனர்.மேலும், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் (Video Surveillance Teams) அமைக்கப்படும். இதில் மொத்தம் 21 நபர்கள் இடம்பெறுவர்.
இக்குழுக்கள் பதிவு செய்யும் காட்சிகளை ஆய்வு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ பார்வையிடல் குழுக்கள் (Video Viewing Teams) அமைக்கப்பட்டு, அதில் 14 நபர்கள் பணியாற்றுவார்கள்.மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ₹50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply