25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பன்னீர் கேப்ஸிகம் மசாலா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

தேவையான பொருட்கள் - 1கப் பன்னீர், 1 வெங்காயம்,1 தக்காளி

2 பச்சை மிளகாய்,1 பச்சை குடைமிளகாய்,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,

1/2 கப் கிரீம்,1 டேபிள் ஸ்பூன் பட்டர்,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,

1டீஸ்பூன் சீரகம், 1|பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய்,

தேவையான அளவு உப்பு

செய்முறை 

ஒரு கப் பன்னீரை எடுத்து கழுவி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலாத்தூள்,உப்பு சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.

கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டர் சேர்த்து உறுகியதும்,சீரகம்,பட்டை, பிரிஞ்சி இலை,இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

அத்துடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

கொஞ்சமாக தண்ணீர் தெளித்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின்னர் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்.

கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.

ஓரளவு கெட்டியானதும், கலந்து இறக்கினால் பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.

தயாரான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.

இப்போது மிகவும் சுவையான பன்னீர் கேப்ஸிகம் மசாலா சப்ஜி சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News