பனீர், க்ரீன் பீஸ் புலாவ்
தேவையான பொருட்கள் - 200 கி பனீர்,11/2கப்வெண் புழுங்கலரிசி,
3/4 கப் ப.பட்டாணி,1 பெரிய வெங்காயம்,2 பிரிஞ்சி இலை,1 ஸ்பூன்சீரகம்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,2 ப.மிளகாய்,
ருசிக்குஉப்பு, 1/2 கப் பால், 2 1/4 கப் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன்நெய்,1 டேபிள்ஸ்பூன் நறுக்கின கொத்தமல்லி தழை,
அலங்கரிக்க: கட் செய்த வறுத்த பனீர் துண்டுகள்
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். ப.மிளகாயை கீறிக் கொள்ளவும்.அரிசியை சுத்தம் செய்து தேவையான தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.பிறகு தண்ணீரை வடித்து விட்டு, 2 1/4 கப் தண்ணீர்,1/2 கப் பால்,1 சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில்1 விசில் விட்டு குழையாமல் உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.பனீரை சதுர வடிவில் கட் செய்யவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், நெய் விட்டு காய்ந்ததும், பனீரை கருகாமல் பொன்னிறமாக வறுத்து, தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில், சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்ததும், வெங்காயம், ப.மிளகாய்,உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.அடுத்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும், பட்டாணியை சேர்த்து,2 நிமிடம் வெந்ததும், வறுத்த பனீரை சேர்க்கவும்.பிறகு, சாதத்தை போட்டு, பனீர் உடையாமல், ஒன்று சேர மெதுவாக கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு இறக்கவும்.இறக்கினதும்,பிறகு பிளேட்டிற்கு மாற்றவும்.
பிளேட்டை சுற்றி பனீர் துண்டுகளை வைத்து, மேலே வறுத்த பனீரை வைத்து அலங்கரிக்கவும். இப்போது, சுவையான பனீர், க்ரீன் பீஸ் புலாவ் தயார்.
0
Leave a Reply