25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


பாரா ஆசிய விளையாட்டு: பதக்க வேட்டைக்குத் தயாராகும் இந்திய அணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா ஆசிய விளையாட்டு: பதக்க வேட்டைக்குத் தயாராகும் இந்திய அணி!

ஜப்பானின் அய்ச்சி–நகோயா பகுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் அக். 18 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியின் 5வது சீசனில், 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 18 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர். மொத்தம் 492 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்தியாவின் சார்பில் 80 வீரர்கள், 41 வீராங்கனைகள் என மொத்தம் 121 பேர் களமிறங்க உள்ளனர். ஆறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், பதக்கங்களைக் குவிக்கும் முனைப்புடன் தயாராகி வருகின்றனர். போட்டியின் தொடக்க விழா அக். 18ம் தேதி நடைபெறுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News