25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேனீக்களின் விஷம் புற்றுநோய் செல்களை அழிக்க சிறந்த ஒரு மருந்து .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேனீக்களின் விஷம் புற்றுநோய் செல்களை அழிக்க சிறந்த ஒரு மருந்து .

ஆஸ்திரேலிய புற்றுநோய் மைய ஆய்வகத்தில் நடைபெற்ற ஆய்வில் புற்றுநோய் செல்களை அழிக்க தேனீக்களின் விஷம் சிறந்த ஒரு மருந்து என்று தெரியவந்து உள்ளது. தேனீ விஷத்தில் காணப்படும் மெலிட்டின் என்ற சேர்மம் மிகவும் சக்தி வாய்ந்தது. இது வலி உணர்வை உருவாக்கும் மூலக்கூறு ஆகும். இந்தமூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்க உதவுமா? என்று ஆய்வுகளில் இறங்கினர்.அதாவது, மெலிட்டின் மனித உடலுக்குள் செலுத்தப்பட்ட20 நிமிடங்களுக்குள் புற்றுநோய் செல்களுக்கு இடையில் உருவாகும் இணைப்பை அழித்து விடுவதையும், புற்றுநோய் செல்கள் வளர்ச்சி உடனே தடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிந்தனர். இது மிகப்பெரிய அதிசயம் என்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர். 

உலக அளவில் பெர்த் வகை தேனீக்கள் மிகவும் ஆரோக்கியமான தேனீக்கள் இனம் என்று கருதப்படுகிறது. தற்போது, இந்த வகை தேனீக்களின் விஷம்தான், புற்றுநோய்க்கு எதிரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.இந்த தேனீக்களை கார்பன்டை ஆக்சைடு ஊற்றி தூங்க வைத்து, உறைநிலையில், தேனீயின் அடிவயிற்றில் இருந்து விஷ முள் வெளியே எடுக்கப்பட்டு, கவனமாக ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் புற்று நோய் கட்டி வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோய் செல்கள் இறப்பை தூண்டுவதிலும் மெலிட்டின் திறன் வாய்ந்தது என்று கருதப்படுகிறது. மனிதனுக்கு வரும் மோசமான நோய்களுக்கும் இயற்கை எளிதான தீர்வுகளை வைத்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டோம் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News