செயின்ட் லூயிஸ் செஸ் தொடரில் முதன்முறையாக சாம்பியன் ஆனார் பிரக்ஞானந்தா.
செயின்ட் லூயிஸ்: ‘கிராண்ட் செஸ் டூர்’ 11-வது சீசன் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. இதன் 4-வது தொடரான செயின்ட் லூயிஸ் செஸ் தொடர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. போட்டிகள் ‘ரேபிட்’ மற்றும் ‘பிளிட்ஸ்’ முறையில் நடத்தப்பட்டன.
முதலில் நடைபெற்ற ‘ரேபிட்’ பிரிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
இதையடுத்து நடைபெற்ற ‘பிளிட்ஸ்’ பிரிவில் 18 சுற்றுகள் முடிவில் 11.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
ஒட்டுமொத்தமாக ‘ரேபிட் + பிளிட்ஸ்’ பிரிவுகளில் 23.5 புள்ளிகள் (12.0 + 11.5) பெற்ற பிரக்ஞானந்தா, செயின்ட் லூயிஸ் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
0
Leave a Reply