7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் வாக்குச் சீட்டு ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (16.04.2026) தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026 முன்னிட்டு, தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU), விவிபேட் (VVPAT) இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை தேர்தல் பொதுப்பார்வையாளர் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்) திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்குப்பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU), விவிபேட் (VVPAT) இயந்திரங்களை தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 644 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 322 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 349 விவிபேட் இயந்திரங்கள், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 369 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 369 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 400 விவிபேட் இயந்திரங்கள்,204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 698 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 349 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 378 விவிபேட் இயந்திரங்கள், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 345 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 345 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 374 விவிபேட் இயந்திரங்கள்,
206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 337 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 337 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 365 விவிபேட் இயந்திரங்கள், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 648 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 324 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 351 விவிபேட் இயந்திரங்கள், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 700 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 350 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 379 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள்,என ஆக மொத்தம் 3741 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2396 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 2596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருந்திய வாக்குச் சீட்டு (Ballot Paper) பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply