25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"மன்னர் ராஜேந்திர சோழன்-I இன் கடற்படைப் பயணத்தின் 1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை  பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை27,2025)"மன்னர் ராஜேந்திர சோழன்,I இன் கடற்படைப் பயணத்தின்1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.குதிரையில் சவாரி செய்யும் பேரரசர் கப்பலை பின்னணியாகக் கொண்டு இருப்பது போன்ற படம் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோமகன்ஒரு நாணயத்தை வடிவமைத்து ,நாணயத்தை வெளியிடுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாணயம் வெளியிடப்பட்டது. குதிரையில் சவாரி செய்யும் பேரரசரின் உருவம், கப்பலைபின்னணியாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.பிரதமரால் வெளியிடப்பட்ட₹1,000 நாணயம்.

 தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நாணயத்தைப் பெற்றுக்கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News