பூசணிக்காய் சூப்
பூசணிக்காய் உடலுக்கும் உரமூட்டும் சக்தி பெற்றது உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
தேவையான பொருட்கள் -பூசணிக்காய்- முக்கால் கிலோ, பால் - 3 கப்,வெண்ணெய் - 1மேசைக்கரண்டி ,
மைதா மாவு -1 மேசைக்கரண்டி,மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை - பூசணிக்காயின் தோலைச் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி வேக வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை மிதமாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் விட்டு மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சூடான பால், பூசணிக்காய் விழுது, மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி வைத்து இறக்கவும்.சூடாகப் பரிமாறவும்.
0
Leave a Reply