முள்ளங்கி கீரை பொரியல்.
தேவையான பொருட்கள்
முள்ளங்கி கீரை - 2 கட்டு (பொடியாக நறுக்கியது),
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது),
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,
பூண்டு - 4 பல் (தட்டியது),
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு
தாளிக்கவும்.
அதனுடன் தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம்
சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய முள்ளங்கி கீரையை சேர்த்து
மிதமான தீயில் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையில் உள்ள நீர் வற்றும் வரை
நன்றாக வேக வைக்கவும்.
இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான
முள்ளங்கி கீரை பொரியல் தயார்.
சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி கீரையை சாதத்துடன் சேர்த்தும், சைடு டிஷ்
ஆகவும் வைத்துக்கொண்டு சுவைக்கலாம்.
0
Leave a Reply