சிவப்பு அவல் கேரட் போகா.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - ஒரு கப்
பெரிய சிவப்பு கேரட் -1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)
காய்ந்தமிளகாய் - 1
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி
மல்லித்தழை, கறிவேப்பிலை
(பொடியாக அரிந்தது)- ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்
கடுகு,உளுந்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
சிவப்பு அவலை சுத்தம் செய்து நன்றாகக் கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணொய் விட்டு காய்ந்த தும், கடுகு, கடலைப்பருப்பு,
வேர்க்கடலை தாளித்து, மிளகாயை கிள்ளிப் போடவும்.
பின்னர் வெங்காயம், கேரட்டை நன்றாக வதக்கி, மல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி
விட்டு, ஊறவைத்த அவலைக் கொட்டி உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி, வெள்ளரி விதை தூவி இறக்கவும்.
சிவப்பு அவல் கேரட் போகா தயார்.
இது தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து சாப்பிட, ருசி அள்ளும்,
0
Leave a Reply