25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மல்லாகிணறு பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லாகிணறு பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,10,890 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,40,624 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,27,628 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2,41,193 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 2,20,231 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2,16,869 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 2,15,219 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களும் என மாவட்டத்தில் மொத்தம் 15,72,654 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தொடர்ச்சியாக கள ஆய்வு மேற்கொண்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.அதன்படி, மல்லாகிணறு பேரூராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News