25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் - உலகளாவிய சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் - உலகளாவிய சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு

விருதுநகர் மிளகாய்வத்தல் மண்டபத்தில் (06.05.2025) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் - உலகளாவிய சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தொழில் வளர்ச்சிகள் மேம்பட்டு இருக்கிறது. 1922 ஆம் ஆண்டு இந்த பகுதி முதன் முதலாக பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதற்கடுத்து அச்சுத் தொழிலும், அதை ஒட்டி விருதுநகர் உடைய வணிக வளமாக மாறி, சற்று ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது.இன்று தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில்; விருதுநகர் மாவட்டம் முதல் 5 இடங்களில் வர்த்தகம் செய்கிறது  என்றால் இந்த பகுதியில் நடைபெற்ற தொழில் வளர்ச்சியும், அதுக்கு தகுந்தாற்போல் இந்த பகுதியில் உள்ளவர்களின் உழைப்பும் தான் அடிப்படையான காரணம்.

தற்பொழுது சமீபத்தில் சம்பா மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.  இது மிக முக்கியமான  வரலாற்று நிகழ்வு. ஏனென்றால், நமது பகுதியில் விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதிகளில் எல்லாம் உள்ளடக்கி சற்று ஏறக்குறைய 15 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு  இந்த மிளகாய் வத்தல் சாகுபடி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மாறி வரக்கூடிய உணவு முறைகளினால் பழைய உணவு முறைகள், பாரம்பரிய உணவு முறைகளுக்கு எல்லாம் மிகப்பெரிய ஒரு சந்தை வாய்ப்புகள் தற்பொழுது கிடைத்திருக்கிறது.  உலகம் முழுவதும் பல்வேறு துரித உணவுகள் என்று சொல்லக்கூடிய பாஸ்ட் புட்டில் கூட மிளகாய் வத்தல் இருக்கக்கூடிய சில பொருட்களை எடுத்து அதற்கான உப பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.

எனவே இதற்கான உலக அளவில் சந்தை வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் நமக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த 15,000; ஹெக்டேர் அளவிலான சாகுபடி பரப்பை 40,000;, 50,000; அளவிற்கு நாம் உயர்த்துவோம் என்றால் நிச்சயமாக இந்த பகுதி உலக அளவில் அந்த மிளகாய் வத்தல் ஏற்றுமதியில் ஒரு நல்ல இடத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.நமது பகுதிக்கென்று விளையக்கூடிய இந்த மிளகாய் வத்தல் சுற்றுச்சூழலுக்கு எப்படி உகந்ததாக இருக்கிறது. இதை நாம் செய்யக்கூடிய நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனுடைய இயற்கை சார்ந்த வேளாண்மையில் இதனுடைய தாக்கம் என்ன என்பதெல்லாம் இன்னும் தெரிந்து கொண்டால் நிச்சியமாக அதற்கு மிகபெரிய உலக அளவிலான சந்தை வாய்ப்புகள்; ஏற்படும்.

தற்பொழுது நமது பகுதியில் இந்த மிளகாய் வத்தல் ஏற்றுமதி மற்றும் விவசாயிகளெல்லாம் ஒருங்கிணைத்து  உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நமது மாவட்டத்தில் இரண்டு மிக முக்கியமான ஆராய்ச்சி நிலையங்கள் மூலமாக விவசாய குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் ஒன்று அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் திருவில்லிபுத்தூரில் இருக்கக்கூடிய பருத்தி ஆராய்ச்சி நிலையம் மூலமாக பல்வேறு விவசாய தொழில் தொழில்நுட்பங்களை நமது விவசாய பெருங்குடி மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறீர்கள்.

தற்பொழுது புவிசார் குறியீடு கிடைத்ததற்கு பிறகு  இன்னும் என்னென்ன விதமான வாய்ப்புகள் இருக்கிறது.  அறுவடை செய்து அவற்றை பாதுகாத்து ,அதனை பதப்படுத்தி உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலமாக அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு என்னென்ன விதமான தொடர்ச்சியான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம்; நமது வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக தொடர்ச்சியாக அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்.நமது விருதுநகர் மாவட்டத்தில் வத்தல் வியாபாரிகள் சங்கம் என்பது கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த வணிகத்தை மிக சிறப்பாக கட்டமைத்து இருக்கிறார்கள். இந்த வணிகத்தையும் தாண்டி, நாம் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை செலுத்தி இன்னும் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசினுடைய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செய்து கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News