சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம்களை 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
.1.1.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டுவாக்காளர்பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெற்றும் வருகின்றனர். இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டதன் பேரில் வாக்காளர்கள் பெருமளவில் இம்முகாம்களில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.
எனவே இந்த சிறப்பு முகாம்களை 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாதவர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்காதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply