முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் பதிவு செய்யும் வகையில், காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 23.07.2009 அன்று உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதல்வர் கலைஞரின் காப்பீட்டுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.இத்திட்டம் 10.01.2022 அன்று மேலும் 1.47 குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் விரிவுபடுத்தப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின்படி காப்பீட்டு திட்ட பயனாளி குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ரூ.5 இலட்சம் வரை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம்.
நமது விருதுநகர் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் வாரியாக செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 28 ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற இருக்கிறது.இம்முகாமில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு, காப்பீட்டு அட்டை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்முகாமிற்கு வருபவர்கள் குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் விபரம் : மாவட்ட திட்ட அலுவலர், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், விருதுநகர், 73730-04974 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply