கீரை கொழுக்கட்டை.
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை- 1 கட்டு,
அரிசி மாவு -1 கப்,
உளுந்தம் பருப்பு, துருவிய தேங்காய் - தலா 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் -2,
பெருங்காயத்துாள்,கடுகு, தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முளைக்கீரையை சுத்தம் செய்து, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். சூடு ஆறியதும்அரைக்கவும். பின், அரிசி மாவு சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு கிளறவும். அதை சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள், தேங்காய் துருவல் போட்டு வதக்கி, அதனுடன் வேக வைத்த கொழுக்கட்டைகளை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவை மிக்க, 'கீரை கொழுக்கட்டை' தயார். மாலை நேர சிற்றுண்டியாக உண்ண ஏற்றது.
0
Leave a Reply