ஆஸ்கர் போட்டியில் களமிறங்கும் 'ராமாயணா'!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 6 நாட்களிலேயே உலகளவில் ரூ.800 கோடி வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படம் 99-வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளது. ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வாகாமல், தனிப்பட்ட முறையிலும் ஆஸ்கர் பொதுப் பிரிவு போட்டிக்கு திரைப்படங்களைச் சமர்ப்பிக்க முடியும். அந்த நடைமுறையின்படி 'ராமாயணா' ஆஸ்கர் போட்டியில் களமிறங்குகிறது.
0
Leave a Reply