25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாக  கழிக்கும் வகையிலும், அவர்களுக்குள் நல்ல சிந்தனையை விதைத்து,  ஊக்கப்படுத்தும் வகையிலும், திரையிடப்பட்ட சிறந்த திரைப்படங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாக கழிக்கும் வகையிலும், அவர்களுக்குள் நல்ல சிந்தனையை விதைத்து, ஊக்கப்படுத்தும் வகையிலும், திரையிடப்பட்ட சிறந்த திரைப்படங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், அவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஓவியம், நாட்டுப்புற கலைகள், போஸ்டர் தயாரித்தல், கதை சொல்லி, புத்தகம் பேசுதல், கலைப் பொருட்கள் தயாரித்தல், மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு 25.04.2025 முதல் 01.05.2025 வரை காலை 10:30 மணி மற்றும் பிற்பகல் 2:30 மணி என இரண்டு வேளைகளில்  திரையிடப்பட்டு வருகிறது.இந்த திரைப்படக் காட்சியில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையிலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் சிறந்த திரைப்படங்கள் 25.04.2025 மற்றும் 26.04.2025 ஆகிய இரண்டு நாட்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரண்டு நாட்களில் சுமார் 2000 -ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறந்த திரைப்படங்களை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.25.04.2025 அன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை காக்கா முட்டை என்ற திரைப்படமும், 1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை தி லயன் கிங் என்ற திரைப்படமும் திரையிடப்பட்டன.இன்று 26.04.2025 -- 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தி லைப் ஆப் பி என்ற திரைப்படமும், 4 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை பிரோசன் 2 என்ற திரைப்படமும் திரையிடப்பட்டன.

நாளை 27.04.2025 -- 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சார்லி ஆண்ட் தி சாக்லேட் என்ற திரைப்படமும், 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை பேபிஎஸ் டே அவுட் என்ற திரைப்படமும் திரையிடப்படுகின்றன. அதனை தொடர்ந்து வருகின்ற 26:04.2025 வரை ஒவ்வொரு நாளும் இரண்டு சிறந்த திரைப்படங்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திரையிடப்பட உள்ளன.இந்தத் திரைப்படக் காட்சிகள் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி, சிவகாசி ICAI,அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில்   திரையிடப்படுகின்றது.மேலும், இந்த திரைப்படக் காட்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என    மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News