பட்டாசு வெடிபொருள் தொழிற்சாலைகளில் நிலையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன .
விருதுநகர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தலைமையில், மாவட்ட நிருவாகம் மூலம் நியமனம் செய்யப்படும் அலுவலர்கள் இணைந்து பட்டாசு வெடிபொருள் தொழிற்சாலைகளில் 28.09.2026 முதல் 16.10.2026 வரை ஆய்வுகள் மேற்கொள்ள ஒன்றிய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்பேரில், மாவட்ட நிருவாகத்தால் வருவாய்த் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளிலிருந்து அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி துறை அலுவலர்களை உள்ளடக்கிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் தலைமையிலான குழுவினரால், பட்டாசு தொழிற்சாலை உரிமங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயக்கங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) -இன்படி தொழிற்சாலைகள் இயக்கப்படுவதை ஆய்வு செய்து, தொழிற்சாலை நிருவாகத்தினருக்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படும்.
மேலும், தொழிற்சாலைகளில் விதிமீறல்கள் ஏதும் நடைபெறுவது பொதுமக்களுக்கு தெரிய வந்தால், அது குறித்து உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04562 252017 மற்றும் 1077 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply