25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கப்பணிகள் மற்றும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்து  ஆய்வு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கப்பணிகள் மற்றும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகரில் உள்ள உணவு தயாரிக்கும் மையத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கப்பணிகள் குறித்தும், விருதுநகர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், (11.09.2026) ஆய்வு மேற்கொண்டார். 
 

தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களான 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கேற்ப மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வசதிகள், உணவு பரிமாறும் இடங்களின் சுகாதாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும்,விருதுநகரில் செயல்பட்டு வரும் காலை உணவு தயாரிக்கும் மையத்தில் மாணவர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், உணவுப் பொருட்களின் தரம், சமையல் நடைபெறும் முறை, உணவு தயாரிக்கும் பணியாளர்களின் சுகாதாரம், சமையலறையின் தூய்மை, உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு சத்தான, சுகாதாரமான மற்றும் தரமான காலை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து முடிக்கவும், பயனாளிகளின் வருகை, பதிவு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில் குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News