சர்க்கரைவள்ளி கிழங்கு பஜ்ஜி.
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 (தோல் சீவி மெல்லிய வில்லைகளாக
நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள்,
பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
கொஞ்சம் சிறிதாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு பஜ்ஜி மாவு
கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
நறுக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு துண்டுகளை மாவில் முக்கி
எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும்
எடுக்கவும்.
பிரெட் பஜ்ஜி போல் சிறு இனிப்பு சுவையில் மிக அருமையாக இருக்கும்
இந்த சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி...
தேங்காய், தக்காளி சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.
0
Leave a Reply