இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலினை (12.11.2026) வெளியிட்டார்.விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், ஏற்கனவே 1999 வாக்குச்சாவடிகள்இருந்தன. வாக்குச்சாவடி மறுசீரமைப்பின் மூலம் கூடுதலாக 17 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு தேர்தல் ஆணைய ஒப்புதல் படி தற்போது 2016 வாக்குச்சாவடிகல் உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,04,812 ஆண் வாக்காளர்களும், 1,10,853 பெண் வாக்காளர்களும், 33 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,15,698 வாக்காளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,09,601 ஆண் வாக்காளர்களும், 1,15,993 பெண் வாக்காளர்களும், 41 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,25,635 வாக்காளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,12,037 ஆண் வாக்காளர்களும், 1,18,836 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,30,936 வாக்காளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,11,465 ஆண் வாக்காளர்களும், 1,18,509 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,30,002 வாக்காளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 98,127 ஆண் வாக்காளர்களும், 1,04,126 பெண் வாக்காளர்களும், 40 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,02,293 வாக்காளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,01,068 ஆண் வாக்காளர்களும், 1,07,670 பெண் வாக்காளர்களும், 31 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,08,769 வாக்காளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 1,01,595 ஆண் வாக்காளர்களும், 1,04,657 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,06,268 வாக்காளர்கள் என ஆக மொத்தம் 7,38,705 ஆண் வாக்காளர்களும், 7,80,644 பெண் வாக்காளர்களும், 252 மூன்றாம் பாலினத்தவர்கள் என ஆக மொத்தம் 15,19,601 நபர்கள் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
01.01.2027-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்களார் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தற்போது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜீலை 1. அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது நிரம்பிய இந்திய குடிமகன்கள் இணையதளம் வாயிலாகவோ/வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம்.அதன்படி 12.11.2026 முதல் 11.12.2026 வரை பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். 21.11.2026, 22.11.2026 மற்றும் 29.11.2026 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். 28.12.2026-ஆம் தேதிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்களை முடிவு செய்யப்படும். 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமலும், தகுதியற்ற ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வகையிலும் வாக்காளர் பதிவு அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 01.01.2027 க்குப் பின்னர் 18 வயது பூர்த்தி பெறாத நபர்களிடமும், வாக்காளர்களிடமும் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் இறந்திருப்பின் படிவம் 7 பெற்று நீக்கம் செய்ய வேண்டும். படிவம் பெறப்படும் போது இறப்புச் சான்று இல்லாத நிலையில் கள விசாரணைப்படி இறப்பினை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிகமான நீக்கல் விண்ணப்பங்கள் ஒரே பாகத்தில் வரப்பெறும் நேர்வில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர் ஒவ்வொரு வாரமும் கூட்டம் நடத்தி வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கான பட்டியலை கொடுத்து ஒப்புதல் பெற்று வைக்கப்பட வேண்டும். வாக்காளர் பதிவு அலுவலர் கூட்டம் நடத்தும் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் கையொப்பம் பெற்று வைக்க வேண்டும். பெயர்களை நீக்கும் பொருட்டு தனிப்பட்ட நபர் மற்றும் BLA (Booth Level Agent) & RWA (Residence Welfare Associations) தெரிவிக்கும் இனங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள ஆய்வு செய்து ஒவ்வொரு இனங்களையும் முடிவு செய்ய வேண்டும்.
DSE/PSE நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்க நெருங்கிய உறவினர்களிடமிருந்து படிவம் 7 பெற்றும் நீக்கம் செய்யலாம். மேலும் இறந்தவர்களை நீக்க படிவம் 7 வரப்பெறாத பட்சத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள ஆய்வு மூலமும் வாக்காளர் பதிவு அலுவலர் முடிவு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர்கள் ஏற்கனவே BLA (Booth Level Agent) வாக்குச்சாவடி வாரியாக வழங்கியிருப்பின் இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் BLA 1 ஒப்புதலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.BLA (Booth Level Agent) பட்டியலில் வழங்காதவர்கள் உடனடியாக பட்டியல் தயார் செய்து BLA 1 ஒப்புதலுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி க.சசிகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிரியதர்ஷினி, தேர்தல் வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply