25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


குழந்தை திருமணம் தொடர்பான புகார்களுக்கு 1098 மற்றும் 181 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தை திருமணம் தொடர்பான புகார்களுக்கு 1098 மற்றும் 181 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

குழந்தை திருமணம் பெண் குழந்தைகளின் குழந்தை பருவத்தை பரித்து அவர்களின் நல்வாழ்வை அச்சுறுத்துகிறது. மேலும் இளம் வயது கர்ப்பத்தினால் மகப்பேறு காலத்தில் குழந்தை அல்லது தாய் இறந்துபோதல், குழந்தை ஊனமாக பிறத்தல், அந்த பெண்ணின் உள்உறுப்புக்கள் பலம் இழந்து போவது, குழந்தையின் கல்வி தடைபடுவது, குடும்ப வன்முறைக்கு ஆளாகுவது போன்றவை ஏற்படும்.

எனவே, பெண் குழந்தைகளுக்கு 18 வயதும், ஆண் குழந்தைகளுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் திருமணம் செய்து வைப்பதும், ஆதரிப்பதும் சட்டப்படி குற்றமாகும். குழந்தை திருமண தடை சட்டம் 2006 குழந்தை திருமணத்தை தடுத்தல், தொடர்புடைய குழந்தையை பாதுகாத்தல், குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளது. மேலும் இச்சட்டத்தில் தொடர்புடைய நபர்கள் ஜாமினில் வெளிவர இயலாது. குழந்தை திருமணம் நடத்தி வைத்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100,000/ அபராதமும் விதிக்கப்படும்.

அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும், அவர்களது கிராமங்களில் குழந்தை திருமணம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள், வழிபாட்டு தலங்களில் உள்ள அறநிலைத்துறை அதிகாரிகள் தங்கள் கோவில்களில் மற்றும் மண்டபங்களில் திருமணம் நடைபெறும் முன்பே மணமக்களின் திருமண வயது பூர்த்திஅடைந்திருக்கிறதா என்று சரிபார்த்த பின்னரே, திருமணத்திற்கு அனுமதி வழங்கவேண்டும்.

குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக தகவல் தெரியவந்தால், குழந்தைகள் உதவி எண் 1098, பெண்கள் உதவி எண் 181 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாவட்ட சமூக நல அலுவலர் சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்கலாம், புகார் அளிப்பவரின் விபரம் வெளியிடப்படமாட்டாது. பெண் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News