25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் வழக்குப் பணியாளராக பணிபுரிய   தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் வழக்குப் பணியாளராக பணிபுரிய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமூக நலத் துறையின் மூலம், விருதநகர், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான இந்திய அரசின் சிறப்புத் திட்டம் - (One Stop Centre)   ஒருங்கிணைந்த சேவை மையத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker)-1 பணியிடம் தொகுப்பூதியம் முறையில் நிரப்பப்படவுள்ளது.

விண்ணப்பதாரர் விருதநகர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள்  இருத்தல் வேண்டும். சமூகப்பணி, சமூகவியல், உளவியல் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கியதில் ஒரு வருட அனுபவம்  பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,800/- வழங்கப்படும்.

தகுதியான நபர்கள் 30.11.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News