யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வரலாற்றுச் சாதனை: இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று அம்பேகர் அசத்தல்.
செனகலில் நடைபெற்று வரும் 4-வது யூத் ஒலிம்பிக் போட்டியில், 205 நாடுகளைச் சேர்ந்த 2,654 இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 6 வீரர்கள், 11 வீராங்கனைகள் என மொத்தம் 17 பேர் 11 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்கியுள்ளனர்.
இதில் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் மணிப்பூரைச் சேர்ந்த இந்திய வீரர் அம்பேகர் மீட்டெய் பங்கேற்றார். விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் அம்பேகர் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 34-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
0
Leave a Reply