விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது .
Tதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, “கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள்–2026 (LEARN TO SWIM)” ஏப்ரல் 2026 முதல் ஜூன் 2026 வரையிலான விடுமுறைக் காலத்தில், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சலை ஒரு அத்தியாவசிய வாழ்வியல் திறனாக உருவாக்கும் நோக்கில், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீச்சல் குளங்களிலும் 'நீந்தக் கற்றுக்கொள்' பயிற்சி வகுப்பை நடத்திடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகள் 5 தொகுதிகளாக நடத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளுக்கான முதல் தொகுதியானது 01.04.2026 முதல் 16.04.2026 வரையிலும், இரண்டாம் தொகுதி 17.04.2026 முதல் 02.05.2026 வரையிலும், மூன்றாம் தொகுதி 03.05.2026 முதல் 16.05.2026 வரையிலும், நான்காம் தொகுதியானது 17.05.2026 முதல் 31.05.2026 வரையிலும், ஐந்தாம் தொகுதியானது 02.06.2026 முதல் 14.06.2026 வரையிலும் நடைபெற உள்ளது.
நீச்சல் கற்றல் பயிற்சிக்கான காலை நேர வகுப்புகள் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலும், காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை நேர வகுப்புகள் மதியம் 3.30 மணி முதல் 4.30 வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
2026-ஆம் ஆண்டிற்கான கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பயிற்சிக் கட்டணமாக ரூ.1770/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும் கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் மேற்குறிப்பிட்டுள்ள கால அட்டவணையின்படி பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கலாகிறது.
மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் நீச்சல் பயிற்றுநர் திரு. சுப்ரமணியன் அவர்களை 9751393412 என்ற அலைபேசி எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply