25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்  நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைசிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக பயிற்சி வகுப்புகள் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் (இருபாலருக்கும்) நடத்தப்பட உள்ளது.நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்த உடன் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆகையால் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொண்டு அடிப்படை நீச்சல் பழகி கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பள்ளிஃகல்லூரி, மாணவ/மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.

மேலும், பயிற்சி வகுப்பு நடைபெறும் நாட்கள் முதல் தொகுப்பு - 01.04.2025 முதல் 13.04.2025, இரண்டாம் தொகுப்பு- 15.04.2025 முதல் 27.04.2025, முன்றாம் தொகுப்பு- 29.04.2025 முதல் 11.05.2025, நான்காம் தொகுப்பு- 13.05.2025 முதல் 25.05.2025 மற்றும் ஐந்தாம் தொகுப்பு- 27.05.2025 முதல் 08.06.2025 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இது தொடர்பான விவரங்களை பெற -97513-93412 என்ற நீச்சல் பயிற்றுநர் அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News