'டி-20' உலக கோப்பைலீக் போட்டி 12th FEB
நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ,குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் மோதின.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/6 ரன் எடுத்தது,
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 187 ரன்னில் ஆல் அவுட்டாக, போட்டி சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. இரு அணிக்கும் தலா ஒரு ஓவர் தரப்பட்டன. போட்டி மீண்டும் 'டை' ஆனது
ஐ.சி.சி., விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படும் வரை, 'சூப்பர் ஓவர்' தொடர்ந்து நடத்தப்படும்.
இரண்டாவது சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, 23/0 ரன் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணி 19/0 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply