மருத்துவ குணங்கள் நிறைந்த அதலைக்காய்,
அதலைக்காய், பொதுவாகஅதிகம்விரும்பிசமைக்கப்படும்காய்அல்ல.பலர்இதைருசித்திருக்கக்கூடமாட்டார்கள்.ஆனால், சித்தமருத்துவர்களுக்கும். ஒரு சில விவசாயிகளுக்கும் மிகவும் பரிச்சயமானசொல்,அதலைக்காய். இது பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.மருத்துவ குணங்கள், சத்துகளின் மகுட மாகத் திகழும் அதலைக்காய், குளிர் காலத்தில் அதிகமாக விளையும்.இது சாதாரணமாக கண்மாய்க் கரைகள், புறம்போக்கு நிலங்கள், வேலியோரங்களில் வளரும் கொடி வகையாகும்.
அதலைக்காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிற வெளித் தோலில் எட்டு நுண்ணிய வரிகள் இருக்கும். விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டைவடிவில்வழுவழுப்பாகவும்பளிச்சென்றும்இருக்கின்றன.அதலைக்காயை அப்படியே சமைத்தும், வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது அதலைக்காய். இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின் சி. பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிகமாக உள்ளன.மஞ்சள் காமாலை பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக அதலைக்காய் கருதப்படுகிறது. குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த காய் அருமருந்தாக அமையும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் அருமையான ஒரு காய், இதன் மருத்துவ குணங்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி. சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுக்குள் வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அதலைக்காய் நிவாரணம் அளிக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு உள்ளானவர்கள், இந்தக் காயை தினந்தோறும் அவர் களது உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடற்புழு பிரச்சினை உள்ளவர்களுக்கு அதலைக்காய் நன்மை பயக்கும். இதில் உள்ள சத்துகள், வயிற்றுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன, அதலைக்காய் வயிற்றில் காணப்படும் கிருமிகளை அழிப்பதோடு குடற்புழு பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.
ஆனால், மற்ற காய்கறிகளைப் போல அதலை காயை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது.அதிக நாட்கள் வைத்திருந்தால் இது தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால்காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும்.பாகற்காயை எப்படி பொரியல் அல்லது. வைத்துச் சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிடலாம்.
காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானதுதான். இது கசப்புத் தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதற்கு ஏற்ற சுவையில் இருக்கும்.எனவே அனைத்து வயதினரும் இந்த உட்கொள்ளலாம். அதலைக்காயின் மருத்துவ குணங்கள், ஆரோக்கிய நன்மைகளுக்காகவே அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் நல்லது.
0
Leave a Reply