25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்” திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்” திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்” திருவிழா- 2025, 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய தினங்களில் கிருஷ்ணன் கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 7- ஆம் வகுப்பு வரை பயிலும் 300 -க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.
டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் (இணை இயக்குநர்), பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் குழந்தைகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார்.மேலும், “குழந்தைகள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் எழுத்தாளரும், நடிகர் மற்றும் கதைச்சொல்லி என பன்முக ஆளுமை கொண்ட திரு.பவா செல்லதுரை அவர்கள்  சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மேலும், குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளது. குழந்தைகள் இலக்கியத் திருவிழா நிறைவு விழாவில் எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை (சாகித்திய அகாடமி விருதாளர்) சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

 எனவே, குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி  குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News