77-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.01.2026) நடைபெற்ற இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வருகை தந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் வரவேற்றார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காலை 8.15 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய 169 தலைமைக் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பாக ஒரு பயனாளிக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் போர் கைம்பெண் கருணைத்தொகையும் மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.25,000/- போரில் ஊனமுற்றமைக்கான வருடாந்திர பராமரிப்பு மானியத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக திகழ தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வரும் 19 மாவட்ட நிலை அலுவலர்களுக்கும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சிறப்பு இனங்களில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது சிறு சேமிப்பு தொகையை வழங்கிய பள்ளி மாணவனுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்கும்,2 சிறந்த குருதிக் கொடையாளர்களுக்கும், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் பொது வாழ்க்கைக்கான சிறந்த சேவை புரிந்தவருக்கும், ஒரு சிறந்த குழந்தைகள் நல காப்பகத்திற்கும், சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளருக்கும், சிறந்த தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு உதவிய எழுத்தாளருக்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் பயன்பெற்று முன்னேறி வரும் 5 பயனாளிகளுக்கும், 2 சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஒரு சிறந்த பள்ளிக்கும்,
சிறந்த இளம் தொழில் முனைவோர், சிறந்த பெண் தொழில் முனைவோர், சிறந்த மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர், சிறந்த வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சிறந்த விவசாயி, சிறந்த சுற்றுச்சூழல் ஊக்கி ஆகியோருக்கும், 2 சிறந்த தன்னார்வ கொடையாளர்களுக்கும், 2 சிறந்த அங்கன்வாடி பணியாளர்கள், 2 சிறந்த அங்கன்வாடி உதவியாளர்கள், 2 சிறந்த சத்துணவு பணியாளர்கள், 4 சிறந்த தொண்டு நிறுவனங்கள், 2 சிறந்த திருநங்கைகள், 11 சிறந்த ஊராட்சி செயலர்கள், 3 சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு சாலை பாதுகாப்புக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரியும் 2 தூய்மைப்பணியாளர்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த 12 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், நகராட்சியில் சிறப்பாக பணிபுரியும் 2 தூய்மைப்பணியாளர்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தபணிகள் துறையில் 2 பணியாளர்கள், தீயணைப்பு மீட்புத்துறையில் 3 பணியாளர்கள், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிபுரிந்தமைக்காக 4 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.2000/-ரொக்கப்பரிசு, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைச் சார்ந்த 149 அரசு பணியாளர்களுக்கும், குடியரசு தின விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த 16 நபர்களுக்கும் என மொத்தம் 293 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), மாவட்ட அளவிலான அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply