“என் ஊர், என் கனவு” (Vision-2030) திட்டம் இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (03.02.2026) “என் ஊர், என் கனவு” (Vision-2030) திட்டம் மூலம் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் வகையில், இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பதற்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டத்தினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ராஅவர்கள், I A S ., துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு துறைகள் மூலமாக உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனுடைய அடுத்த முன்னெடுப்பாக “என் ஊர் என் கனவு” திட்டமானது 2030 க்கான கனவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
"என் ஊர் என் கனவு" (My Town My Dream) என்ற திட்டமானது, 2030-க்குள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரையும், மாவட்டத்தையும் இலக்கு வைத்து, வளர்ச்சிக்கான தொலைநோக்கு அறிக்கை (Vision Document) தயாரிக்கும் தமிழக அரசின் ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் மூலமாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது.கூடுதலாக மாவட்ட வளர்ச்சிற்காக திட்டமிடுவதற்காக “என் ஊர் என் கனவு” திட்டம் மூலம் 2030 எதிர்கால தொலைநோக்கு பார்வையோடு, விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்களிப்பினை அளிக்கும் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு துறைகளில் சிறந்த சாதனையாளர்கள், தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிகள், அலுவலர்கள், துறை வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO’s) சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிற பங்குதார்களை கொண்டு கருத்துகள் கேட்பதற்காக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகின்றது.
இதன் மூலம் கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று விவாதித்து 2030 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை மற்றும் திட்ட ஆவணத்தை (preparation of vision 2030 Strategy and plan Document) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக தொழிலாளர் நலத்துறை, கல்வி வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை, உள்கட்டமைப்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய 5 முதன்மைத் துறைகள் தேர்வு செய்து, அதன்கீழ் பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அத்துறைச்சார்ந்த வல்லுநர்களால் அடுத்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் சிறந்த திட்டங்களை Template ஆக உருவாக்கப்படவுள்ளது.அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்ட கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 இடங்களில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அனைத்து துறைச்சார்ந்த வல்லுநர்களால் அளிக்கப்பட்ட திட்டங்கள் தொகுக்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் ஒருநாள் நிகழ்ச்சிக்காக சென்னைக்கு அனுப்பப்பப்படும்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முன்னெடுப்புக்கு தேவையான கருத்துகள், விருப்பங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த சிறுதானிய உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்து மாறாமல் மதிப்புக்கூட்டி 16 வகையான பொருட்களை தயார் செய்து வெற்றிகரமாக லாபம் ஈட்டி ஆசியா புக் ஆப் ரிக்கார்டடு விருது, புதிய கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசின் தேசிய விருது, தமிழ்நாடு வர்த்தக சங்கத்தால் மில்லட் மேன் தமிழ்நாடு விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற திரு.எஸ்.சிவகுமார் அவர்கள்,கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் வீணை இசையில் முதலிடம் பிடித்த விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.மோகன அரசி அவர்கள்,
சதுரங்க போட்டியில் 3 முறை இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் (SGFI) 2 முறை தங்கப்பதக்கமும், 1 முறை வெள்ளிப்பதக்கமும் பெற்ற செல்வன் ஷதுர்ஷான் அவர்கள் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்இக்கூட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திருமதி கு.மோகனா, மேற்பார்வை பொறியாளர் (விருதுநகர் மின் பகிர்மான வட்டம்) திருமதி லதா, அரசு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், துறை வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGO’s) சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள், தொழிலதிபர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply