திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (06.01.2026) நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில், ரூ.3 இலட்சம் மானியம் மற்றும் வங்கிக்கடன் நிதியுதவியாக ரூ.10 இலட்சத்தில் அமைக்கப்பட்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, உழவர் நல சேவை மைய செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மல்லி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில், 2025-26ஆம் ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்ட மக்காச்சோள சிறப்பு தொகுப்பு செயல் விளக்கத்திடலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிடம் மகசூல் குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் வட்டம், முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண் இயந்திரமாக்குதல் – துணை இயக்கத்திட்டத்தில் ரூ.46 ஆயிரம் மானியத்தில் விவசாயிக்கு சுழல் கலப்பையினையும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் ரூ.1,360/- மானியத்தில் விவசாயிக்கு தார்பாலினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி ஊராட்சி மற்றும் முத்துவெங்கட்ராயபுரம் ஊராட்சிகளில் எண்மய பயிர் கணக்கெடுப்பு பணிகள் (Digital Crop Survery) நில உடைமை பதிவுகள் (Farmers Registery) மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் ஊராட்சியில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தென்னை பரப்பு விரிவாக்கம் இனத்தில் ஒரு ஹெக்டர் பரப்பளவிற்கு குட்டை/நெட்டை தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இத்திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் ரூ.12,000/-மதிப்புள்ள தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வி) திருமதி அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) திருமதி முத்துலெட்சுமி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, வட்டார உதவி இயக்குநர்கள் திருமதி தனலெட்சுமி, திருமதி திலகவதி, வேளாண் உதவி இயக்குநர் திரு.சக்தி கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply