மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (27.02.2026) இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட் (IOCL) நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (ALIMCO) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.60 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதித்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.05 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் மின்கல மூன்று சக்கர சிறப்பு நாற்காலிகளை(Neo motion) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ALIMCO மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு, கடந்த 2026 ஜனவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 404 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தற்போது இந்தியன் ஆயில் கார்பரேஷன் (Indian Oil Corporation) சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 110 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.39.60 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, ஆக்சில்லா ஊன்றுகோல்கள், முழங்கை ஊன்றுகோல்கள், ரோலேட்டர், பிரெய்லி பிரம்பு, சுகம்யா பிரம்பு, CP சக்கர நாற்காலி, காதொளி கருவிகள், செயற்கை உறுப்பு, காலிபர்ஸ் உள்ளிட்ட உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில்வேல், இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் அலிம்கோ நிறுவனத்தின் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply