25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சூலக்கரை அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூலக்கரை அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் 2026-2027ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரையில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில், 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் . அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளியின் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகள்:

இப்பள்ளியில் சேர்ந்து பயிலும் செவித்திறன் குறையுடைய மாணவ, மாணவியர்களுக்குப் பின்வரும் கட்டணமில்லாச் சலுகைகளும் தங்கும் வசதிகளும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன:

 இலவசப் பொருட்கள்:

1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லாச் சீருடைகள், பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.

விலையில்லா விடுதி வசதி:

மாணவ, மாணவியர்கள் தங்கிப் பயில்வதற்கேற்ப, இலவச உணவுடன் கூடிய தனித்தனிப் பாதுகாப்பான விடுதி வசதிகள் உள்ளன.

கல்வி உதவித்தொகை:

இங்கு பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் அரசின் கல்வி உதவித்தொகை (Scholarship) தவறாமல் வழங்கப்படும்.

நவீனக் கல்வி முறை:

சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, திறன் வகுப்பறைகள் (Smart Classrooms) மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (High-Tech Computer Labs) வழியாக மாணவர்களுக்குப் பாடங்கள் எளிமையாகக் கற்பிக்கப்படுகின்றன.எனவே, செவித்திறன் குறையுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு தலைமை ஆசிரியர், அரசு செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளி,  சூலக்கரை, விருதுநகர் – 626 003 என்ற முகவரியிலோ அல்லது 94999 33454 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News