25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்(12.08.2025) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மற்றும் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை இணைந்து அமைக்கப்பட்டுள்ள பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த மையம் மூலம் பொது மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் இங்கு சேகரிக்கப்பட்டு, அதற்கான பரிசோதனை அறிக்கைகளும் இங்கே வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான நோயாளிகள் பரிசோதனை மாதிரிகள் வழங்குவதற்காக ஆய்வகத்திற்கு செல்வதை தவிர்த்து, இங்கு வழங்குவதன் மூலம் கூட்டம் நெரிசல் இல்லாமலும், நோய் தொற்று பரவும் அபாயம் இல்லாமலும் இருக்கும்.

அதன்படி, இந்த பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News