25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


சாத்தூர் வட்டத்தில்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  (18.11.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், (18.11.2026) விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ்  நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சாத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்க டை பார்வையிட்டு பொருள்களின் தரம் மற்றும் இருப்பு, பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பின்னர், படந்தாலில் உள்ள அரசு சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் வசதி, தங்கும் அறைகளின் தூய்மை, அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து,  மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாகவும் தரமாகவும் வழங்கிடவும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை எந்த ஒரு தொய்வின்றி பயனாளிகள் மற்றும் பொதுமக்களை சென்றடைவது உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி, நகராட்சி பகுதிகளில்  மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் ஆய்வு செய்து,

 மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் பொருட்டு கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்றவும், கழிவுநீர் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி மோகனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,   அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News