ஹாங்காங் ஓபன்: லக்சயா சென் அசத்தல் வெற்றி.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் சூப்பர் 500 அந்தஸ்து கொண்ட ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்ஸ் வீரர் அர்னாட் மெர்க்லை எதிர்கொண்டார். 1 மணி நேரம் 9 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் லக்சயா சென் 14-21, 21-16, 25-23 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோகி வடனபேயை 21-16, 16-21, 21-9 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் அஷ்மிதா, இஷா ராணி மோதினர். இதில் அஷ்மிதா 12-21, 21-13, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply