குழந்தை ஹோம்வொர்க் செய்யும்போது, குழந்தையின் சின்னஞ்சிறு மனதைப் பாதுகாக்கும் பொறுமையையும் அன்பையும்தான்.
குழந்தை ஹோம்வொர்க் செய்யும்போது, கொஞ்சம் பொறுமையாக இரு அம்மா...
அவன் இன்னும் குழந்தைதான்... எல்லாவற்றையும் ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியாது...
தவறு செய்தால் திட்டாதே...மெதுவாகப் புரிய வை...
சொன்னதையே திரும்பத் திரும்பக் கேட்டாலும் கோபப்படாதே...அவனுக்குப் புரியும் வரை அன்போடு சொல்லிக்கொடு...
அவன் உன்னைச் சோதிக்கவில்லை...தன்னால் முடிந்த அளவுக்குக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறான்...
ஹோம்வொர்க் சரியாக முடிக்கவில்லை என்றால் பரவாயில்லை...ஆனால் உன் கோபத்தால் அவன் மனம் உடைந்துவிடக் கூடாது...
நினைவில் வைத்துக்கொள் அம்மா...
இன்றைய பாடங்கள் நாளை மாறிவிடும்...இந்த ஹோம்வொர்க் புத்தகங்களும் ஒருநாள் மூடப்பட்டுவிடும்...
ஆனால், கற்றுக்கொள்ளத் தெரியாத வயதில்அம்மா தன்னிடம் எப்படி நடந்துகொண்டார் என்ற நினைவு அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்...
அதனால் இன்று மதிப்பெண்களை விட அவனுடைய மனதிற்கு முக்கியத்துவம் கொடு...
ஏனென்றால், அவனுக்குத் தேவை ஒரு கண்டிப்பான ஆசிரியர் அல்ல...தவறு செய்யும்போதும் தன்னைப் புரிந்துகொள்ளும் அன்பான அம்மா!
இன்று தேர்ந்தெடுப்பது கோபத்தை அல்ல. குழந்தையின் சின்னஞ்சிறு மனதைப் பாதுகாக்கும் பொறுமையையும் அன்பையும்தான்!
0
Leave a Reply