சிறுபான்மையினர்கள் வழிபாட்டு தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்கள்/மேற்கொள்பவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.புத்த மதத்தினர் பீகாரில் உள்ள புத்த கயா, உத்திரபிரேதேசத்தில் உள்ள குசிநகர், வாரணாசியில் உள்ள சாராநாத் கோவில், பீகாரில் உள்ள ராஜ்கிர் வைஷாலி, நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள்,
சமண மதத்தினர் இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி, குஜராத்தில் உள்ள பாலிடனா, பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில், கர்நாடகாவில் சரவணபெலகோலா போன்ற இடங்கள்,
சீக்கிய மதத்தினர் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தகட் ஸ்ரீகேசகர் சாகிப் தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த சிங்), தகட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மகாராஷ்ட்ரா) பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப் , குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா மண்டி சுகர்காணா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற இடங்கள்,
இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பபடிவங்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து (அறை எண்: 505) கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரியகட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply