25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் இணைந்து அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 11.10.2025 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை நடைபெற உள்ளது.

  இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் MRF, V.V.V & SONS EDIBLE OIL, ROYAL ENFIELD ACADEMY, APOLLO PHARMACIES, MEENAKSHI MISSION HOSPITAL, LAKSHMI MILLS WORK COIMBATORE, SENTERSOFT TECHNOLOGIES, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற  100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள தங்களது சுய விவர சான்றிதழ் (RESUME), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும்.

இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் Google Form https://forms.gle/FBjDgJFUQc4ChtNc9 ஐ பதிவு செய்யுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்: 9360171161 அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com)  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News