25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (20.05.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, பேருந்து நிலைய வளாகத்தின் தூய்மை நிலை, செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் தரம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, சுகாதார வளாகம் பராமரிப்பு மற்றும் பயணிகள் நலனுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சேவைகளை பெற தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், சுகாதாரமான உணவு தயாரிப்பு முறைகள், சமையலறை பராமரிப்பு, குடிநீர் வசதி, தூய்மை நிலை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேலும், உணவு தயாரிப்பில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றிடவும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் சத்தான உணவுகளை தொடர்ந்து வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

 மேலும், அம்மா உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் தேவைகளை கவனத்தில் கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது அருப்புக்கோட்டை நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News