25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விருதுநகர் மாவட்டம்நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம்நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S, அவர்கள் (29.04.2024) அன்று நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் ஊராட்சி தச்சனேந்தல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும்,உலுத்திமடை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.57 கோடி மதிப்பில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தினையும், அழகாபுரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புரணமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,அழகாபுரி ஊராட்சி சிறுவனூர் கிராமத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், புல்வாய்கரை ஊராட்சியில் கனிமவள நிதியிலிருந்து ரூ.13.37 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், நாலூர் கிராமத்தில் 15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.39.68 இலட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
 
 நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்., கட்டனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் புற நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News