வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 99 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (11.06.2025) நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு நத்தம் இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.6,21,608/- மதிப்பிலும், 1 பயனாளிக்கு நத்தம் வீட்டு மனைப்பட்டா ரூ.13,500/- மதிப்பிலும், 38 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் இ-பட்டா ரூ.24,62,400/- மதிப்பிலும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், 41 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கால்நடைத் துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு விதைப்பைகளையும் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ.30.98 இலட்சம் மதிப்பிலானஅரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.விவசாயத்தில் இருக்கக்கூடிய தொழில்நுட்பங்கள் எல்லாம் பார்த்து விவசாயம் செய்தால் லாபகரமானதாக இருக்கும்.
கால்நடைத்துறையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மற்ற குழுக்களைச் சார்ந்த பெண்கள் 20 நபர்கள் இருக்கக்கூடிய குழுவிற்கு அதிகப்பட்சமாக 50சதவிகித மானியத்துடன் கால்நடைகள் வளர்ப்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் தமிழ்நாட்டிலேயே கடந்த ஆண்டு அதிகமாக வழங்கக்கூடிய மாவட்டம் விருதுநகர் மாவட்டம் தான். கடந்த ஆண்டு ஏறத்தாழ சுமார் 40,000 த்திற்கும் அதிகமான வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கியுள்ளோம்.
அரசினுடைய பல்வேறு திட்டங்களில் செயல்படக்கூடியனவற்றை எல்லாம் நீங்கள் பெற்று கொள்ள வேண்டும். இதன் மூலமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மேன்மையடைய வேண்டும். குறிப்பாக உங்களுடைய பொருளாதார வாழ்க்கை மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தான் அரசு இத்தகைய திட்டங்களை எல்லாம் தீட்டி, நேரடியாக உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஏழை எளிய நடுத்தர மக்கள் பல்வேறு சேவைகளை அரசு மூலமாக பெறுவதற்கும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்கும் புதிய தொழில்களை செய்வதற்கும், அரசினுடைய திட்டங்களை பெறுவதற்கும், இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
0
Leave a Reply