மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் (12.08.2026) நடைபெற்றது.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.13.82 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 75 பயனாளிகளுக்கு ரூ.76.51 இலட்சம் மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.18.56 இலட்சம் மதிப்பில் இணைய வழிபட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 5 பயனாளிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.58200/- மதிப்பில் தெளிப்பு நீர் பாசனம், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், கால்நடை துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2500/- மதிப்பில் தாது உப்பு கலவை மற்றும் புல்கரணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.11827/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டங்களையும், தோட்டக்கலை துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.2.49 இலட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசன மானியம் மற்றும் விதைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.50 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் என மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா I A S , அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், தாட்கோ மேலாளர் திருமதி இந்திரா காந்தி, இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply