25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாமிற்கு சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாமிற்கு சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (29.01.2026) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் [Tamil Nadu Wilderness Experiences Corporation (TNWEC)] சார்பில் திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு முகாமிற்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ., அவர்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம்(TNWEC) இணைந்து, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் (Environment Education Programme EEP) கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் இயற்கை முகாம் செண்பகத்தோப்பு பகுதியில் நடைபெற்றது.

இம்முகாமில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இயற்கை சூழலில் அனுபவக் கற்றலை பெற்றனர்.

மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, இயற்கையை பாதுகாக்கும் பொறுப்புணர்வை வளர்ப்பதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும் முகாமின் ஒரு பகுதியாக இயற்கை நடைபயணம், பறவை பார்வையிடல், அடையாளம் காணுதல் மற்றும் கலந்துரையாடல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டன.இந்நிகழ்ச்சியில் வன சரக அலுவலர், வனத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News