25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் சட்டமன்ற தொகுதி வே.வ.வன்னியப்பெருமாள் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் வித்தியா சாலா பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள் (10.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் 01.01.2027 தகுதியாக கொண்டு 18 வயது நிரம்பிய தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்காக இன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் 202-இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 1,04,604 ஆண்களும், 1,10,595 பெண்களும், 32 இதர பிரிவினரும், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,09,305 ஆண்களும், 1,15,633 பெண்களும், 41 இதர பிரிவினரும், 204-சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,11,807 ஆண்களும், 1,18,512 பெண்களும், 63 இதர பிரிவினரும், 205-சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 1,11,276 ஆண்களும், 1,18,200 பெண்களும், 28 இதர பிரிவினரும 206-விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 97,916 ஆண்களும், 1,03,845 பெண்களும், 40 இதர பிரிவினரும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,00,865 ஆண்களும், 1,07,442 பெண்களும், 30 இதர பிரிவினரும், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,01,409 ஆண்களும், 1,04,394 பெண்களும், 16 இதர பிரிவினரும் என ஆக மொத்தம் விருதுநகர் மாவட்டத்தில் 7,37,182 ஆண்களும், 7,78,621 பெண்களும், 250 இதர பிரிவினரும் என மொத்தம் 15,16,053 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்கள், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்கள், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்கள், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடி மையங்கள், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்கள், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்கள், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1999 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த சிறப்பு முகாமில் 1999 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO), 202 கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A  S., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் விருதுநகர் வட்டாட்சியர் திரு.சுந்தரமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News