போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், (30.01.2026) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை இணைந்து, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில், போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், அரசு அலுவலர்கள், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) திரு.ரமேஷ், விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்குமார், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாணிக்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.செல்வராஜ், அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் திரு.நாகராஜன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி அமராவதி, விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி கல்லூரி முதல்வர் திருமதி சாரதி, சிவகாசி கோட்ட கலால் அலுவலர் திரு.பாஸ்கரன், அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் திரு.ராமசுந்தர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply